தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதி வளாகத்தில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் விடுதியில் துர்நாற்றம் வீசுவதால் மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தங்க சரவணன், மாரண்டஅள்ளி.