செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலுர் ஊராட்சியில் உள்ள விமான் நகர் மற்றும் வெங்கடேஸ்வர நகர் 3வது குறுக்கு தெரு சந்திப்பில் பல நாட்களாக மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி உள்ளது. இந்த பகுதியில் சிறிதளவு மழை பெய்தால் கூட இந்த நிலை உண்டாகிறது. மேலும் இதில் உருவாகும் கொசுக்கள் மற்றும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.