செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி வார்டு 20-க்கு உள்பட்ட கீழ்கட்டளை சுப்புரமணி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளின் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் நிறைந்து வழிந்தோடுகிறது. கடந்த சில மாதங்களாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. இதனால் டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்களும் உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.