டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தில் காட்டுவலவு பகுதியில் சாக்கடை வடிகால் இன்னும் முழுமையாக கட்டவில்லை. பணி பாதியில் நிற்கிறது. இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனே வடிகாலை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.