நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-10 12:13 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பழைய ஒட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-அறிவழகன், பொம்மிடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்