சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் சாலையில் கடந்த சில தினங்களாக கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.