சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-08-30 15:02 GMT

சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் கஸ்தூரி நகர் 4 -வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையின் அருகில் தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்