தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-30 13:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகில் ஒரு அரசு பால்வாடி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வெளிப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தேங்கி நிற்பதால் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதிபடுகின்றனர். மேலும் அதிகபடியாகன கொசுக்கள் உருவாதால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயநிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் அதிகளவு வீசுவதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்