திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் உள்ளது தாதன்குளம். இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. மேலும் அந்த குளம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.