தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சம்புவராயன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு, மூப்பனார் கோவில் தெரு பகுதிகளில் தேங்கும் சாக்கடைகளால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை இந்த பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதையன், பாப்பிரெட்டிப்பட்டி.