சென்னை, அடையாறு பகுதி இந்திரா நகர் 29-வது குறுக்கு தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிறிது அளவு மழை பெய்தாலே பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் வெளியே செல்வதற்க்கு நிரந்தர தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.