திறந்தவெளியில் சாக்கடை கால்வாய்

Update: 2023-08-20 17:46 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு நான்கு ரோட்டில் இருந்து கடை வீதி செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டுவதால் கழிவுநீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

-சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்