தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் பகுதியில் சாக்கடை கால்வாயில் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.