சென்னை வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள பொது கழிவறை பல மாதங்களாக மக்களுக்கு உபயோகத்திற்கு வராமல் உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், முதியவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இல்லாமல் அலைமோதுகின்றனர். எனவே, பொதுக்கழிவறையை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.