சாக்கடை கால்வாயை மூட கோரிக்கை

Update: 2023-08-13 16:57 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 6-வது வார்டு புதுதெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியே நடந்து செல்வோர் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் கொண்டு மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அரவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்