கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துா்நாற்றம் வீசுவதால், போலீசாருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.