செங்கல்பட்டு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிவு ஏற்பட்டு சாலையில் செல்கிறது. இதனால் அருகில் உள்ள பஸ் பயணிகளுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் துர்நாற்றமும் அதிகளவு வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பஸ் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.