சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி அருகில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, இதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.