கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் ஒ. கீரனூர் இந்திரா நகரில் உள்ள முதல் தெருவில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தெருவில் வழிந்தோடும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, கால்வாயை தூர்வாருவது அவசியம்.