கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் யாரேனும் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட வேண்டும்.