சென்னை வேளச்சேரி மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.