தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2023-08-02 14:13 GMT

சென்னை அம்பத்தூர், வெங்கடேஸ்வரா நகர் பாரதிதாசன் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் தெருக்களில் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்