கடலூர் 4-வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் தெருமின்விளக்குகள் இல்லாமலும், சில இடங்களில் இருந்தும் எரியாமலும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வில்வநகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?