தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சி பகுதியில் சில இடங்களில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கின்றது. அதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த பகுதியில் விரைவாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-வெங்கடேசன், அத்திமுட்லு.