கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-07-26 13:34 GMT

செங்கல்பட்டு, பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் 5-வது முதன்மை சாலை அருகில் உள்ள கால்வாயில் கழிவுநீர் நிறைந்து குடியிருப்புகளின் அருகில் உள்ள நிலப்பரப்பில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. மேலும் துர்நாற்றமும் அதிகளவில் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்