சென்னை, தண்டையார் பேட்டை வ.உ.சி.நகாில் உள்ள வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதிதியில் ஒரு மாதத்திற்கு மேல் கழிவுநீர் இணைப்பு குழாய் பழுதடைந்து உள்ளதால், கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குழந்தைகள், வயதானோர் என அனைவரும் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி, அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.