சென்னை சென்டிரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள போலீஸ் நிலையம் அருகில் நடைபாதையில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.