அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் ஒரு சில இடங்களில் மூடப்படாமல் உள்ளதால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் வாய்க்கால்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு சில இடங்களில் தேங்கிய அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.