நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குமரி நெசவாளர் காலனி உள்ளது. இந்த காலனியில் இருந்து ராணித்தோட்டத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் ஓடை முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், நெசவாளர் காலனியில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிந்ேதாடாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் ஓடையை முறையாக அமைத்து தண்ணீர் வடிந்ேதாட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஷன்சன், நெசவாளர்காலனி.