கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை மற்றும் பாஷ்யம் நகரில் உள்ள கால்வாய்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வாாி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த மாநகர மக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.