திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-07-19 16:40 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டில் ரேஷன்கடை அருகில் திறந்த வெளியில் கழிவுநீர் கல்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்