சேலம் மெய்யனூர் சாலையில் சாக்கடை வசதி இல்லாமல் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கொசு தொல்லையும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணி, மெய்யனூர், சேலம்.