கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சின்னவாய்க்கால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சின்ன வாய்க்காலை தூர்வார வேண்டியது அவசியம்.