
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் பள்ளி முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால், அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை தவிா்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.