கடலூர் மஞ்சக்குப்பம் 11-வது வார்டு பாரதிதாசன் தெருவில் கால்வாய் தூா்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.