சென்னை, திருவொற்றியூர்சண்முகபுரம் பகுதியில் உள்ள சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலைகளில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மகக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.