சென்னை சென்டிரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமரர் அறை செல்லும் வழியில் கடந்த 2 வாரங்களாக கழிவுநீர் கால்வாய் மேல்பகுதி உடைந்த நிலையில் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.