சென்னை பழவந்தாங்கல், நோபல் முதல் தெருவில் உள்ள பொது கழிவறை பல மாதங்களாக பொது மக்களுக்கு உபயோகத்திற்கு வராமல் அப்படியே உள்ளது. அருகில் ரெயில் நிலையம் இருப்பதால் பயணிகளுக்கு பயன்படும் வகையில் கழிவறையை உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.