திறந்திருக்கும் கால்வாய்

Update: 2023-06-28 18:13 GMT
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இதில் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து பாதுகாப்பான முறையில் மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்