சுகாதார சீர்கேடு

Update: 2023-06-18 11:52 GMT

திருவாரூர் தெற்குவீதியில் உள்ள வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கழிவுநீர்தேங்கி கிடப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும், இனிவரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்