சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-06-14 17:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.கே.ரோடு ஹட்கோ குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியின் பல்வேறு இடங்களில் சாக்கடைகள் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சில தெருக்களில் கழிவுநீர் சாலையிலேயே வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பழனி, ஓசூர்.

மேலும் செய்திகள்