கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-06-14 16:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் பஜனை கோவில் தெருவில் கடந்த 2 மாதங்களாக கால்வாய் அடைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்