கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடி கிராமத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிட கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-அண்ணாமலை, பெரிய தள்ளப்பாடி, கிருஷ்ணகிரி.