கடலூர் மாநகராட்சி 8-வது வார்டில் உள்ள செந்தாமரை நகரில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதில் குழந்தைகள், வயதானவர்கள் எவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
