கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பாளையத்தில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
