விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி அய்யனாபுரம் பஜனை கோவில் தெருவில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் புதிதாக கழிவுநீர் வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.