கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி ரகமத் காலனி அண்ணா நகரில் இருந்து தனியார் லாட்ஜ் வரை உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தராஜ், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.