ஓசூர் மாநகராட்சியில் 5 மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட இயற்கை நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சீத்தாராமன், இயற்கை நகர், ஓசூர்.