கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகர் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒரு மாதத்திற்கு முன்பு குழி தோண்டப்பட்டது. இதில் பாதி முடித்த நிலையில் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதில் வயதானவர்களும், குழந்தைகளும் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த கழிவு நீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பர்கூர், கிருஷ்ணகிரி.