சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெட்டிகுப்பம் செல்லும் சாலை ஓரத்தில் பள்ளம் உருவாகி அதில் கழிவு நீர் தேங்கி உள்ளது. தற்காலிகமாக அதை தடுப்பு வேலி கொண்டு மூடியுள்ளனர். ஆனால் இந்த சாலையில் தினமும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே அந்த பள்ளத்தை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும்.